scrolling-text

Back to Top

Tuesday, July 17, 2012

புனித மிகு ரமலான்





அன்புள்ள சகோதர,சகோதரிகளுக்கு வணக்கம் 
அஸ்ஸலாமு அழைக்கும்
இன்ஷா அல்லா இன்னும் ஓர்ஈறு நாட்களில் புனித மிகு ரமலான் மாதம் நம்மை அடைய இருக்கிறது இம் மாதம் இஸ்லாமியற்களுக்கு தரப்பட்ட
சிறப்பான மாதமாகும்.இம் ரமலான் மாதம் இதுவரை செய்த பாவங்களை போக்கி கொள்வதற்கும் நற்செயல்களை செய்து நன்மைகளை தேடுவதற்கும் சிறப்பான மாதமாகும்.உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களும்  மிகவும் ஆர்வமாக வரவேற்று  இம்மாதம் முழுவதும் சிறப்பு மிக்க நோன்பினை நோற்று மகிழ்கின்றனர்.மனிதனின் ஆரோக்கியத்திற்கும் மகிழ்வுக்கும் வழி காட்டும் ரமலானை வரவேற்போம் மற்றும் அதற்குரிய சிறப்பினையும் மரியாதையும் கொடுப்போம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)

அன்புடன்
ஆரிப்கான்.




Sunday, June 3, 2012

வாழ்க்கை சிறக்க


வணக்கம் நண்பர்களே

ஒவ்வொறு ஆணும் மறக்க கூடாத விசயம்
உன்னை கருவில் சுமந்த அன்னையையும் உன் கருவை சுமக்கும் மனைவியையும்!!!!

விட்டுக்கொடுத்தல்;
கணவன் மனைவி இருவருமே கொஞ்சம் ஈகோ பார்க்காமல் விட்டு கொடுத்து போனால் என்றுமே நம் வாழ்கை சுவர்க்கம்
கணவனுக்கு பிடிக்காத சில விசயங்கள் மனைவிடம் இருக்கலாம் அதை போல்
மனைவிக்கு பிடிக்காத சில விசயங்கள் கணவனிடம் இருக்கலாம் ஏன் என்றால் இரண்டு பேருமே வெவ்ேவரு வீட்டில் பிறந்து வெவ்ேவரு சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் அவர்கள் ஒன்றாக சேரும்போது சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும் அதையும் மீறி அவர்கள் ஒருவர்க்கொருவர் விட்டு கொடுத்து வாழ்தால் அவர்கள் வாழ்கை சிறக்கும்.

ஒரு சில மனைவிமார்கள் செய்யும் தவறுகள்;
ஆண்கள் சில விசயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகம் சுழிப்பார்கள் உதாரணத்திற்கு நான் உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும் என்பார்கள் உடனே ஆண்கள் ஏதோ பிரச்சினையை கிளப்பதான் அடி போடுகிறாள் என்று உடனே தலை மறைவாகி விடுவார்கள் ஏன் என்றால் ஆண்களுக்கு தெரியும் பேசுவதையும் பேசிவிட்டு கடைசியில் அழுகை ஆத்திரம் தீர்வில்லாத நிலையில்தான் அப்பிரச்சனை முடியும் என்று. எதையும் மனம்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கதை,கட்டுரை,சினிமாவில் வேண்டுமானால் சரியாக தெரியலாம் ஆனால் நடைமுறை வாழ்கையில் அது ஒத்துவராது என்பது என் கருத்து.

இழிவாக பேசுதல் ;
பெண்கள் தங்கள் துணைவருடன் உறவுசீர் கெட முக்கிய  காரணம் அவரின் அம்மாவை பற்றியோ அல்லது அவரின் குடும்பத்தை பற்றியோ இழிவாக 
பேசுவதுதான். பெண்களுக்கு எப்படி தங்கள் அம்மாவை மற்றும் குடும்பத்தை பிடிக்குமோ அப்படிதான் ஆண்களுக்கும் அதனால் தன் குடும்பத்தை பற்றி குறை கூறுவதை அவர்கள் விரும்புவது இல்லை. 

ஒப்பிட்டு பார்த்தல்;
என் தங்கை வீ ட்டுகாரர் அந்தமாதிரி இருக்கார் உங்க நண்பரை பாருங்கள் எப்படி இருக்கார் என உங்கள் துணைவரை யாருடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் ஏன் என்றால் பெண்கள் தாங்களின் துணைவருடன் ஒப்பிட்டு பேசும் நபரிடம் வெளிப்படையாக காணத பல குறை இருக்ககூடும் கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு வியப்பது அறிவீனம்.பெண்கள் எப்படி தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவது இல்லையோ அதை போல் தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.

திருந்தவவே மாட்டிங்க;
நீங்கள் எப்பவும் இப்படித்தான் திருந்தவவே மாட்டிங்க என்று முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவது இல்லை. ஒருவரை பற்றி இவர் இப்படிதான் என்று வெகு சீக்கிரம் முடிவு கட்டி விடுவது பெண்களின் இயல்பு.தவறு செய்வது மனித இயல்பு. சிலருக்கு சில தவறுகள் சில முறை இயல்பாகவே நேர்ந்து விடும் அதை பற்றி எண்ணி அந்த ஆணே வருத்தில் குற்ற உணர்வில் இருப்பார் அப்போது அவருக்கு ஆறுதலாக இருப்பது தான் பெண் துணையின் மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பார் அது ஏன் மனைவியாக இருக்க கூடாது என்பது தான் என் கேள்வி.

என்னது இவன் பெண்களை பற்றிேய குறை சொல்லி எழுதி உள்ளாேன ஆண்கள் யாரும் தவறு செய்யவில்லையா என்று நம் தாய்குலங்கள் கேட்பது புரிகிறது இன்ஷாஅல்லாஹ் ஆண்கள் செய்யும் தவறு பற்றி அடுத்த பதிவில்.

அன்புடன்
ஆரிப்கான்.

Saturday, June 2, 2012

மீண்டும் உதயமானது லால்பேட்டை வார சந்தை


லால்பேட்டையில் பல வருடங்களுக்கு பின் மீண்டும் 31-05-2012 வியாழக்கிழமை முதல் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்துக்கு சொந்தமான கைகாட்டியில் உள்ள வணிக வளாக கீழ்தளத்தில் (வெள்ளியாங்கரை தர்கா பின்புறம்) வாராந்திர சந்தை காய்கனி மற்றும் கால்நடை சந்தை நடைபெறுகிறது .பொதுமக்கள் அனைவரும் பயனடையுமாறு    அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வியாபாரம் செய்ய சந்தையில் கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை அணுகவும்.
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித்.லால்பேட்டை
செல்:9487994340 –8940450084
நன்றி
Lalpet.net

Tuesday, May 22, 2012

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்


தமிழகம் முழுவதும் நடந்து முடிந்து பிளஸ் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.வழக்கம் போல மாணவிகளே சாதித்தனர்

Monday, April 16, 2012

வெளிநாட்டு வாழ்க்கை


என் போன்ற வெளிநாட்டு பேச்சுலர்ஸ் வாழ்க்கை மிகவும் கொடுமையானது,

Wednesday, March 21, 2012

ரியாலிட்டி ஷோ

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..


இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில்,வெவ்வேறு பெயர்களில் வெளி வந்து கொண்டிருப்பது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனி மனித உறவுகளை சீர்குலைக்கும் நிகழ்ச்சிகள்..! தனிப்பட்ட மனிதர்களின் கண்ணீர் ,துயரம்,ஆவேசம், என்று அவர்களின் அந்தரங்கத்தை கூறு போட்டு காசு பார்க்கும் சேனல்களின் கண்டுபிடிப்பு தான் இந்த ரியாலிட்டி ஷோக்கள்..!

Tuesday, March 13, 2012

மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் நேற்று லேசான மழை பெய்ததால் குளிர்ச்சியாககாணப்பட்டது.