scrolling-text

Back to Top

Tuesday, March 13, 2012

மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் நேற்று லேசான மழை பெய்ததால் குளிர்ச்சியாககாணப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் "தானே' புயலுக்குப் பின்னர் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் காய்ந்து வருகிறது. பகலில் காயும் வெயில் தாக்கத்தால் இரவில் புழுக்கம் ஒருபுறம், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு ஒருபுறம் என மக்கள் அவதியடைந்துவந்தனர்.
இதற்கிடையே நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.மதியம் 12 மணியளவில் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து சற்றே ஜில்லென குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் இந்த மழையால் உளுந்து பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்கு மழை பெய்தால் உளுந்து செடிகள் முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவித்தனர்.


அன்புடன்
ஆரிப்கான்

No comments:

Post a Comment