வணக்கம் நண்பர்களே
ஒவ்வொறு ஆணும் மறக்க கூடாத விசயம்
உன்னை கருவில் சுமந்த அன்னையையும் உன் கருவை சுமக்கும் மனைவியையும்!!!!
விட்டுக்கொடுத்தல்;
கணவன் மனைவி இருவருமே கொஞ்சம் ஈகோ பார்க்காமல் விட்டு கொடுத்து போனால் என்றுமே நம் வாழ்கை சுவர்க்கம்
கணவனுக்கு பிடிக்காத சில விசயங்கள் மனைவிடம் இருக்கலாம் அதை போல்
மனைவிக்கு பிடிக்காத சில விசயங்கள் கணவனிடம் இருக்கலாம் ஏன் என்றால் இரண்டு பேருமே வெவ்ேவரு வீட்டில் பிறந்து வெவ்ேவரு சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் அவர்கள் ஒன்றாக சேரும்போது சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும் அதையும் மீறி அவர்கள் ஒருவர்க்கொருவர் விட்டு கொடுத்து வாழ்தால் அவர்கள் வாழ்கை சிறக்கும்.
ஒரு சில மனைவிமார்கள் செய்யும் தவறுகள்;
ஆண்கள் சில விசயங்கள் தங்கள் காதில் விழுந்தாலே முகம் சுழிப்பார்கள் உதாரணத்திற்கு நான் உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும் என்பார்கள் உடனே ஆண்கள் ஏதோ பிரச்சினையை கிளப்பதான் அடி போடுகிறாள் என்று உடனே தலை மறைவாகி விடுவார்கள் ஏன் என்றால் ஆண்களுக்கு தெரியும் பேசுவதையும் பேசிவிட்டு கடைசியில் அழுகை ஆத்திரம் தீர்வில்லாத நிலையில்தான் அப்பிரச்சனை முடியும் என்று. எதையும் மனம்திறந்து பேசித் தீர்க்க வேண்டும் என்பது கதை,கட்டுரை,சினிமாவில் வேண்டுமானால் சரியாக தெரியலாம் ஆனால் நடைமுறை வாழ்கையில் அது ஒத்துவராது என்பது என் கருத்து.
இழிவாக பேசுதல் ;
பெண்கள் தங்கள் துணைவருடன் உறவுசீர் கெட முக்கிய காரணம் அவரின் அம்மாவை பற்றியோ அல்லது அவரின் குடும்பத்தை பற்றியோ இழிவாக
பேசுவதுதான். பெண்களுக்கு எப்படி தங்கள் அம்மாவை மற்றும் குடும்பத்தை பிடிக்குமோ அப்படிதான் ஆண்களுக்கும் அதனால் தன் குடும்பத்தை பற்றி குறை கூறுவதை அவர்கள் விரும்புவது இல்லை.
ஒப்பிட்டு பார்த்தல்;
என் தங்கை வீ ட்டுகாரர் அந்தமாதிரி இருக்கார் உங்க நண்பரை பாருங்கள் எப்படி இருக்கார் என உங்கள் துணைவரை யாருடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் ஏன் என்றால் பெண்கள் தாங்களின் துணைவருடன் ஒப்பிட்டு பேசும் நபரிடம் வெளிப்படையாக காணத பல குறை இருக்ககூடும் கண்ணில் தெரிவதை மட்டும் கண்டு வியப்பது அறிவீனம்.பெண்கள் எப்படி தங்களை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை விரும்புவது இல்லையோ அதை போல் தான் ஆண்களும் என்று உணர வேண்டும்.
திருந்தவவே மாட்டிங்க;
நீங்கள் எப்பவும் இப்படித்தான் திருந்தவவே மாட்டிங்க என்று முத்திரை குத்தப்படுவதை ஆண்கள் விரும்புவது இல்லை. ஒருவரை பற்றி இவர் இப்படிதான் என்று வெகு சீக்கிரம் முடிவு கட்டி விடுவது பெண்களின் இயல்பு.தவறு செய்வது மனித இயல்பு. சிலருக்கு சில தவறுகள் சில முறை இயல்பாகவே நேர்ந்து விடும் அதை பற்றி எண்ணி அந்த ஆணே வருத்தில் குற்ற உணர்வில் இருப்பார் அப்போது அவருக்கு ஆறுதலாக இருப்பது தான் பெண் துணையின் மதிப்பை ஆணுக்கு உயர்த்தும்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பார் அது ஏன் மனைவியாக இருக்க கூடாது என்பது தான் என் கேள்வி.
என்னது இவன் பெண்களை பற்றிேய குறை சொல்லி எழுதி உள்ளாேன ஆண்கள் யாரும் தவறு செய்யவில்லையா என்று நம் தாய்குலங்கள் கேட்பது புரிகிறது இன்ஷாஅல்லாஹ் ஆண்கள் செய்யும் தவறு பற்றி அடுத்த பதிவில்.
அன்புடன்
ஆரிப்கான்.
No comments:
Post a Comment