என் போன்ற வெளிநாட்டு பேச்சுலர்ஸ் வாழ்க்கை மிகவும் கொடுமையானது,மிகவும் சுமையானது வெளிநாட்டில் வேலை பார்க்கும் பேச்சுலர்கள் பற்றி எழுதனும் என்றால் அதற்கு ஒரு பதிவு போதாதாது.ஊரிலிந்து தாய் தந்தையர்கள்,மனைவி மற்றும் உறவுகள் எல்லாத்தையும் விட்டுவிட்டு தனியே இங்கு வந்து வேலை பார்க்க வருகிறோம். காசு கிடைக்கிறது ஆனால் நிம்மதி என்பது இல்லை.
ஊரில் இருந்தவரை அம்மா கையால் சாப்பிட்டு விட்டு இங்கு ஓவ்வொன்றிற்கும் நாமா தேடி போய் சாப்பிடனும்.இப்ப தான் தோனும் ஆகா அம்மா கையில் வைத்து கொண்டு தாங்கினார்களே. என்ன ஆட்டம் போட்டோம். அப்படி எல்லாம் நினைக்க தோனும்.இது மனதளவில் பெரும் சோகத்தை உண்டாக்கும். அப்படி உள்ள நேரத்தில் என் மனதில் தோன்றிய சிறு கவிதை
கொடுமை இது கொடுமை
கொண்டவளை விட்டு வந்து
கொடுமை பல தாங்கி
கொத்தடிமைகளாய் வாழ்கிறோம்-இங்கு
அன்புடன் பேச அம்மா இல்லை
அரவணைத்து கொள்ள மனைவி இல்லை
ஆறுதல் கூற உறவுகள் இல்லை-எங்களின்
பசுமையான பழைய நினைவுகளை எண்ணி
பாழாய் போன பாலைவனத்தில் வசிக்கிறோம்
இப்பவாவது பரவாயில்லை நான் வந்த புதுதில் எல்லாம் போனில் தொடர்பு கொள்வது மிகவும் சிரமம் . போன் பேச பூத்துக்கு செல்லனும்.அதுவும் வெள்ளிகிழமை மட்டும் தான்.நமக்கு கிடைக்கும் நேரத்தில்பூத்துக்கு சென்று பார்த்தால் அங்கே ஒரு கியூ நிற்கும்.இப்படி பல தொல்லைகள். அனால் இப்ப நல்ல வசதிகள் உண்டு ஈமெயில், சாட்டிங், செல்போன் என்று, இப்படி வசதிகள் வந்த பிறகு மணிகனக்கில் நம் சொந்தங்களோடு பேசுகிறோம் அப்படி மணிகனக்கா பேசினாலும், பத்த மாட்டுங்கிறது சம்பாதிக்கும் காசை போனில் தான் என் போன்று நிறைய பேச்சுலர்கள் செலவிடுகின்றனர்இருந்தாலும் எங்கள் வெளிநாட்டு வாழ்கையில் இந்த தொலைபேசி பெரிதும் உருதுணையாகஇருக்கிறது, கணக்கு போட்டு பார்த்தால் வாங்கும் சம்பளத்தில் பாதியை இந்த
தொ(ல்)லைப்பேசிக்கே சிலவிடவேண்டி உள்ளது. இந்த சூழ்நிலையில் நான் எழுதிய புது கவிதை
கணக்கு போட்டு பார்த்தேன்
கன்னா பின்னா என்று போனது
கன்ட்ரோல் செய்ய நிணைத்தேன்
கடமை என்னை வென்றது- இருந்தும்
கடல் தாண்டி வந்த எனக்கு
கவலையை மறக்க உதவியவள் நீயே
தொலைவில் உள்ள என்னவளின் குரலை கேட்டேன் உன்னால்- அவளால்
சில தொல்லைகள் வருவதும் உன்னாலே
நீர் இருக்க பாலை பருகும் அன்னம் போல்
தீமையை பிரித்து நன்மையை மட்டும் நீ எனக்கு தருவாயா????
பேச்சுலர்ஸ் வாழ்க்கை பற்றிய உண்மையை கூறியுள்ளீகள்.நன்றாக உள்ளது,வாழ்த்துக்கள்.
ReplyDeleteதாங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே
Delete